சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இது ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவான படம். அதாவது வெவ்வேறு கதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி இருந்தார், மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தர், ரதான் இசை அமைத்திருந்தார்.
இதில் அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அபி ஹசன், ரேயா, கே.எஸ்.ரவிகுமார், ரித்விகா, அஞ்சு குரியன், பானுப்ரியா, இளவரசு, அபிஷேக், ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலிருக்கும் நான்கு நபர்களின் வாழ்க்கை மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சாலை விபத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான கதை. நாளை (ஞாயிறு) மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.