சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா |
ஜீ தமிழில் ஏப்ரல் 11 முதல் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் “கன்னத்தில் முத்தமிட்டால்”. ஒரு வளர்ப்புத் தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையிலான பாசமிகு அழகிய பந்தத்தினை இந்த தொடர் சொல்ல உள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால் நாயகியான ஆதிரா ஒரு புத்திசாலித்தனமான, பரபரப்பான டீன் ஏஜ் பெண். ஆனால், கசப்பான கடந்த கால அனுபவத்தினால் அவளது வளர்ப்புத்தாய் சுபத்ராவை அவள் வெறுக்கிறாள். அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை வெளிப்படும் போது, அவர்களது உறவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதிரா மற்றும் சுபத்ராவிற்கும் இடையே விளக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவதே இக்கதையின் சுவாரஸ்யமான பகுதியாகும்.
இதில் மனிஷாஜித் ஆதிராவாகவும், திவ்யா சுபத்ராவாகவும் நடித்துள்ளனர். ஏப்ரல் 11ம் தேதி முதல் துவங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடர் நேயர்களுக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் இணைந்து பயணிக்க வைத்து, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தினையும் அளிக்கும்” என்கிறார் ஜீ தமிழ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிஜூ பிரபாகரன்.