'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

தமிழில் 'காட்டுப்பய சார் இந்த காளி', 'தாயம்' உள்ளிட்ட சில படங்களின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐரா அகர்வால். அதன்பின் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். தற்போது கலர்ஸ் தமிழின் மதுரை சிஸ்டர்ஸ் தொடரில் நாயகியாக நடித்து வரும் ஐரா, முன்னதாக கங்கா, கண்மணி, கடைக்குட்டி சிங்கம், ராஜா மகள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஐரா 2015ல் மிஸ் சவுத் இந்தியா பியூட்டி பேஜேன்ட் பட்டத்தை வென்றவர் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால், அதையும் தாண்டி ஐரா சர்வதேச அளவில் சாதனையும் படைத்துள்ளார். குத்துச்சண்டை வீராங்கனையான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அதோடு வெயிட் லிப்டிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதித்துள்ளார்.




