எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஹீமா பிந்து. இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ள அவர், தற்போது செய்துள்ள காரியத்தால் பலரது மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்.
பொதுவாக தற்போது வெளிவரும் சீரியல்களில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் திருமணமே நடந்தால் கூட அவர்களுக்கு இடையே கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்திய உறவு நடக்காதது போலவே காண்பித்து வருகின்றனர். காரணம் இப்போதுள்ள சீரியல் நடிகைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் பெரிதாக நடிக்க வருவதில்லை என்பதோடு, நடிகைகள் இளைஞர்களை கவரும் வகையில், காதல் நாயகிகளாக வலம் வந்தால் மட்டுமே டிஆர்பியை அள்ள முடியும் என சீரியல் குழுவினர் கருதுவதால் அவ்வாறு திரைக்கதை வடிவமைக்கப்படுகிறது.
ஆனால், அந்த இலக்கணத்தை உடைத்துள்ள இதயத்தை திருடாதே சீரியலில், ஹீமா பிந்து ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஹீரோவுடன் ரொமான்ஸூம் மற்றொரு பக்கம் அன்புள்ளம் கொண்ட தாயாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார். இதானாலேயே ஹீமாவுக்கு ஜெனியூனான ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஹீமா பிந்து, நடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் தான் தாயுள்ளம் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சிறப்பான காரியத்தை செய்துள்ளார். அவர், சமீபத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி, அந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த மகிழ்வான தருணத்தை பகிர்ந்துள்ள அவர், அன்பு பற்றி திருவள்ளுவரின் அருமையான குறள் ஒன்றை நச்சென பதிவெட்டுள்ளார். அந்த பதிவை பார்க்கும் பலரும் ஹீமா பிந்து நடிகை என்பதை தாண்டி மிகவும் நல்ல இதயம் கொண்டவர் என பாராட்டி வருகின்றனர்.