ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 21ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் நம்ம மதுரை சிஸ்டர்ஸ். திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மதுரை மாநகரைப் பின்புலமாக கொண்டிருக்கும் கதையான 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' ஒவ்வொருவரும் தனித்துவமான பண்பியல்புகளை கொண்டிருக்கும் நான்கு உடன்பிறந்த சகோதரிகளின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. பெற்றோர்களை இளம்வயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகள் தலை மீது விழுகிற இந்திராணி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதையில் அன்பு, பாசம் மற்றும் அதிரடி திருப்பங்கள், எதிர்பாரா நிகழ்வுகள் இடம் பெறுகிறது.
தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக பேணி வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் இந்திராணி, ஒரு அப்பாவி என்ற இளம் பெண் நிலையிலிருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதிவாய்ந்த பெண்ணாக எப்படி புதிய அவதாரம் எடுக்கிறார், அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கதை.
இதில் சாயாசிங் இந்திராணியாக நடிக்கிறார். அவரது சகோதரிகளாக சுனிதா, சங்கவி, மற்றும் ஐரா அகர்வால் நடிக்கிறார்கள். தீபக் குமார், ஐரா அகர்வால் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த தொடர் பற்றி நடிகை சாயாசிங் கூறியதாவது: குடும்பத்தில் வழக்கமாக ஆண்கள் தான் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றனர். நம்ம மதுரை சிஸ்டர்ஸ் கதையில் எனது கதாபாத்திரம், குடும்பங்களை ஒருங்கிணைப்பதிலும் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுவதிலும் ஆண்களுக்கு நிகரான திறன் கொண்ட பெண்ணாக உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.