பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள் | அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன் | தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? | ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' |

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர் இன்று சினிமாவில் பிரபல நட்சத்திரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டும் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி வெற்றிகரமான 9 சீசன்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.
இந்நிலையில் தற்போது 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' தன்னுடைய மூன்றாவது சீசனுடன் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒருபுறம் குக் வித் கோமாளி ஹிட் அடித்துக் கொண்டிருக்கு மற்றொரு புறம் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியும் 'ஹேப்பி ஹவர்ஸ் டபுள்' ஆக ஒளிபரப்பாகவுள்ளது.
இம்முறை மதுரை முத்து, ரோபோ சங்கர் மற்றும் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர். ரசிகர்களின் பேராதரவு பெற்ற ஆதித்யா டிவி புகழ் லோகேஷ், குட்டி கோபி, ஆதவன், கலக்கப்போவது யாரு புகழ் சரத், பாலா, நவீன், அமுதவாணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வைரலாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 3 வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.