'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திருடா திருடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாயா சிங், அந்த படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலின் மூலம் தமிழ்நாட்டு இளசுகளை அலறவிட்டார். அதன்பின் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதற்கிடையில் 'அனந்தபுரத்து வீடு' படத்தில் நடித்த சக நடிகரான கிருஷ்ணா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாயா சிங் தற்போது 'பூவே உனக்காக' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதற்கான புரோமோக்கள் சமீபமாக தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அனாதையாக விடப்பட்ட நான்கு சகோதரிகள் 'அன்னம் அங்காடி' என்கிற டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நடத்துவது போல் காண்பிக்கப்படுகிறது.
நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடர் வருகிற பிப்ரவரி 21 முதல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.