மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? |
கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று அறிமுகம் செய்து வைத்தார். ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவது போலவும், தொகுத்து வழங்குவது போலவும் ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
கமல் இல்லாததால் இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது என போட்டியாளர்கள் உல்லாசமாய் இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் ரம்யா கிருஷ்ணன் அதிரடியாய் எவிக்ஷன் கட்டாயம் உண்டு என பேசியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக இருக்கும் சமயத்தில் அவர் யாரை முதலில் எலிமினேட் செய்யப் போகிறார் என்ற ஆவலும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வாரத்தில் ஜக்கி மிக குறைவான ஓட்டுகளை பெற்றிருப்பதாகவும் அவர் தான் எலிமினேட் ஆவர் எனவும் தகவல்கள் உலாவி வருகிறது.