ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அன்பே வா சீரியல் முடியப்போகிறது என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என அதில் நடித்து வரும் நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னணி டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அன்பே வா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரமான பூமிகாவின் மாமியார் திருந்திவிடுகிறார். மேலும், வருணுக்கும் பூமிகாவிக்கும் இடையே நீண்ட நாட்களாக மறைந்திருந்த உண்மையும் வெளிவந்து விடுகிறது. 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள அன்பே வா தொடரில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் அடுத்தடுத்து சரியானது போல் காட்சிபடுத்தபட்டுள்ளது. எனவே அன்பே வா சீரியல் தொடர்ந்து எப்படி நகரப் போகிறது என்ற கேள்வியுடன் பலரும் இந்த சீரியல் முடிந்து விடும் என பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஹேமதயாள் அன்பே வா சீரியல் முடியவில்லை. பல திருப்பங்களுடன் மீண்டும் ஜொலிக்க போகிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.