ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகையான சித்ரா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டு மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உருவாக்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாக தொடங்கி நடிகையாக சின்னத்திரையில் பயணித்து கோடான கோடி மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் முல்லை என்று சொன்னாலே சித்ராவின் முகம் தான் ஞாபகம் வரும். ரசிகர்கள் கூட சித்ராவை முல்லை என்றே அழைத்து வந்தனர். பழகுவதற்கு மிக இனிமையான குணம் கொண்ட அவர் சென்ற வருடம் எதிர்பாரத விதமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை டிசைன் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சித்ராவின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு 'மக்கள் நாயகி' என்ற பட்டம் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.