பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
பொதுத்தேர்தல் போல பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தலும் அதன் வாக்கு எண்ணிக்கையும். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தலைமையிலான அணியினர் பெரு வெற்றி பெற, எதிரணியாக களத்தில் நின்ற பிரகாஷ்ராஜ் தோல்வியை தழுவியுள்ளார். இந்தநிலையில், தான் தெலுங்கு நடிகர் சங்கமான 'மா'விலிருந்து விலகுவதாக பிரகாஷ்ராஜ் பிரஸ்மீட்டில் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எதிரணியினர் நான் கன்னடன், தெலுங்கை சேர்ந்தவன் அல்ல என்கிற பிரச்சாரத்தை முன்வைத்தார்கள். அந்த காரணத்தால் இந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எதிரணியினர் என்னை உள்ளூர் அல்லாதவர் என்று முத்திரை குத்தினர். சகோதரத்துவத்தில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை கேட்பது வேதனையாக உள்ளது. அதனால் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இனியும் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தம் இல்லை. அதனால் சங்கத்தில் இருந்து விலகுகிறேன். அதேசமயம் தெலுங்கு படங்களில் வழக்கம்போல நடிப்பேன்” என்றும் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.