கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ |

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது தமிழில் கமல் நடித்து வரும் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்று (அக்டோபர் 10) பிறந்தநாள் கொண்டாடும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். ஹிந்தியில் நடிகர், தயாரிப்பாளராக இருந்து வரும் ஜாக்கி பாக்நானியுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங், ‛நன்றி அன்பே!! இந்த ஆண்டு நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு...' எனப் பதிவிட்டு தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.
அதேபோல், ஜாக்கி பாக்நானி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‛நீயின்றி, நாட்கள் நாட்களாக இல்லை. நீயின்றி மிகவும் சுவையான உணவுகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனக்கு மிகவும் முக்கியமான மிக அழகான ஒரு ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உன் புன்னகையைப் போலவே இந்த நாளும் உனக்கு மிகவும் பிரகாசமாகவும் உன்னைப் போல அழகாகவும் இருக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே,' என பதிவிட்டுள்ளார்.