கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியான விஜே அர்ச்சனா, செம்பருத்தி, யாரடி நீ மோகினி, பாரதி கண்ணம்மா ஆகிய டாப் சீரியல்களில் நடித்துள்ளார். இருப்பினும் போதிய வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் விஜே பணிக்கே திரும்பினார். இதற்கிடையில் அர்ச்சனா தனது மகளை ஜி தமிழில் ஒளிபரப்பான ஜீன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
வெள்ளித்திரையில் அறிமுகமான அர்ச்சனா சொர்ப்பமான படங்களில் மட்டுமே நடித்துள்ள நிலையில் தற்போது தனது மகள் சாராவுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். டாக்டர் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அர்ச்சனாவும் சாராவும் சமீபத்தில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சிகாக மாடர்னாக உடை அணிந்திருக்கும் சாரா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனை பார்க்கும் நெட்டீசன்கள் அடுத்த ஹீரோயின் மெட்டீரியல் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.