எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… |
ஹாலிவுட் பாணியிலான தி புக் ஆப் ஏனோக் என்ற தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகிறது. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். சாமுவேல் தயாரிக்கும் இப்படத்தை வெயிலோன் இயக்குகிறார். பிரவீன் எஸ்.ஏ இசை அமைக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் வெயிலோன் கூறியதாவது: மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது.
இன்ப்ளுயன்சா என்ற வைரஸ் பரவி கொத்துக்கொத்தாக மனிதர்களை அழித்தது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றன. ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை.என்றார்.