பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். 'ராதேஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், தற்போது 'ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பிரபாஸ் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. 'ஆதி புருஷ்' படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஹிந்தி வசூல் நடிகர்களான சல்மான்கான், அக்ஷ்ய் குமார் கூட அவ்வளவு சம்பளத்தை இதுவரை வாங்கியதில்லை. தென்னிந்திய அளவில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிறார்கள். ஆனால், அவரை மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் அடுத்த பட சம்பளம் 120 கோடி என ஒரு தகவலைக் கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில பரப்பினார்கள்.
150 கோடியே இல்லை என்றாலும் 100 கோடியாக இருந்தால் கூட தற்போது நடிக்கும் படங்கள் மூலம் 500 கோடி வரையாவது சம்பாதித்துவிடுவார் பிரபாஸ்.