பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தூத்துக்குடி படத்தை இயக்கிய சஞ்சய் ராம் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் கிரீன் சில்லீஸ். லெனின், ககன தீபிகா, திவ்யாங்கனா, சாப்ளின் பாலு, பரூக், தினேஷ் நந்தித், பேபி தேவநந்தா, பேபி அனுக்ரகா, பேபி கார்த்திகா ஆகியோருடன் இயக்குனர் சஞ்சய்ராமும் நடித்திருக்கிறார். பினேஷ் தம்பி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.ராம் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சஞ்சய்ராம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோ டிரைவருக்கும், அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவிற்கும் இடையே மலரும் அன்பின் கதையே படம். குழந்தைகள் பாலியலை தோலுரித்துக்காட்டும் கதையம்சம் கொண்டது. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா ஆகிய இடங்களில் 35 நாட்களில நடைபெற்று முடிவடைந்தது. என்றார்.




