நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கடந்த மாதக் கடைசியில் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், அப்போது புதிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. செப்டம்பர் 3ம் தேதிக்குப் பிறகுதான் தியேட்டர்களில் வாராவாரம் புதிய படங்கள் வெளியாகின. அதிகபட்சமாக கடந்த வாரம் செப்டம்பர் 24ம் தேதி 6 படங்கள் வெளியாகின.
இந்த வாரம் நாளை செப்டம்பர் 30 தேதி வியாழக் கிழமை, ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள 'சிவகுமாரின் சபதம்' படமும், நாளை மறுநாள் அக்டோபர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை 'ருத்ர தாண்டவம்' படமும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அக்டோபர் 1ம் தேதி கவின் நடித்துள்ள 'லிப்ட்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நாளையுடன் முடியும் செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 11 படங்கள் தியேட்டர்களிலும், 6 படங்கள் ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளன. அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை வர உள்ளதால் அதை முன்னிட்டு சில படங்கள் வெளியாக உள்ளன. நவம்பர் மாதம் 'அண்ணாத்த' படம் வெளிவர உள்ளதால் அதற்கு முன்னதாக அக்டோபரில் செப்டம்பர் மாதத்தை விட கூடுதல் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.