அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் மற்ற இசையமைப்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இனிமையான பாடல்களைக் கொண்ட படங்களைக் கொடுத்து பேசப்படுவார்கள்.
அந்த விதத்தில் இந்தக் காலத்தில் எண்ணற்ற புது இசையமைப்பாளர்கள் தினம் தினம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர்தான் தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்புகளையும் பெற்று, தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள்.
இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த 'வாகை சூடவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிப்ரான். அப்படத்திற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தன. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்துள்ளார் ஜிப்ரான்.
“குட்டிப்புலி, ரன் ராஜா ரன் (தெலுங்கு அறிமுகம்), உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், பாபு பங்காரம் (தெலுங்கு), ஹைப்பர் (தெலுங்கு), அறம், தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வரூபம் 2, ராட்சசன், அதிரன் (மலையாள அறிமுகம்), ராக்சஷடு (தெலுங்கு), சாஹோ (பின்னணி இசை), க.பெ.ரணசிங்கம்” ஆகியவை அவரது இசையமைப்பில் வெளிவந்த முக்கியப் படங்கள்.
தற்போது தமிழில் 'மகா, பகைவனுக்கு அருள்வாய், கொற்றவை, கூகுள் குட்டப்பா, ஓடி ஓடி உழைக்கணும், இது வேதாளம் சொல்லும் கதை' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
திரையுலகில் தனது 10 வருடப் பயணம் குறித்து ஜிப்ரான், “ஏழு வயதிலிருந்தே, எனக்கு இசையும், தொழில்நுட்பமும் தெரியும் (இயற்கையின் நட்பு), என்னுடைய முதல் படம் 'வாகை சூடுவா' வெளிவந்து இன்றுடன் 10 வருடங்கள் ஆகிறது. இந்த மறக்க முடியாத நாளில், உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் அனைவருக்கும் நன்றி. எனது கனவுப் பயணத்தில் இது ஒரு சிறிய மைல் கல்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.