வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

பிரபல ஜவுளிக்கடை அதிபரான அருண் சரவணன், 'தி லெஜண்ட்' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நேரம் அதிகம் எடுத்து கதை கேட்டு வந்தார். கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆக ஜிப்ரான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் முதல் படமான லெஜண்ட் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தற்போது ஜிப்ரானுடன் பணியாற்ற உள்ளார் சரவணன்.




