பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழில் கதாநாயகியா அறிமுகமான 'பாணா கதாத்தாடி' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு நடித்த சமந்தா, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக அங்கு அறிமுகமானார்.
அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்த சமந்தா, ஹைதராபாத்தில் வசிக்க ஆரம்பித்தார். தனது முதல் தெலுங்குப் படத்தில் ஜோடியாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் 'சாட்' செய்த சமந்தா ரசிகர் ஒருவர் “நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாறுகிறீர்களா' எனக் கேட்ட கேள்விக்கு, “எப்படி இப்படி வதந்தி ஆரம்பமானது எனத் தெரியவில்லை. இது போல 100 வதந்திகள் இருக்கிறது, எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. ஐதராபாத் தான் எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது, நான் இங்கேயே தான் வசிப்பேன்,” என பதிலளித்துள்ளார்.
இதனிடையே நாக சைதன்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லவ் ஸ்டோரி' படத்தின் வெற்றி விழாவில் நாகார்ஜுனா கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த விழாவில் கூட சமந்தா கலந்து கொள்ளவில்லை. இதையும் கூட சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
நாக சைதன்யா, சமந்தா இருவரும் வெளிப்படையாகப் பேசும் வரை இது போன்ற பரபரப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.




