பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் |
ஹாலிவுட், பாலிவுட் படங்களில் தான் பெண்கள், பெண்களை பாலியல் ரீதியாக விரும்பும் லெஸ்பியன் கதைகள் அதிகமாக வெளிவரும், இப்போது தமிழிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. தற்போது தயராகி உள்ள படம் அந்தகா.
கந்தா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து இயக்குநர் ஜேம்ஸ் கிரண். ஜி இயக்கியுள்ளார். ரியாஸ், மனோஜ், ஜேம்ஸ் கிரண், ஆஷிகா, ஜெனிபர் ரேச்சல், பூஜா ஷர்மா ஆகியோர் முக்கிய தாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ளார், பிரசாந்த் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குன் கிரண்.ஜி. கூறியதாவது: அந்தகா என்றால் சமஸ்கிருதத்தில் இருளின் அரசன் என்று பொருள். இந்த படத்தில் வில்லன் இருட்டிலேயே இருப்பார். ஹாரர் காமெடி பாணியில் பயணிக்கும் இப்படம் ஒரு சைக்கோ திரில்லராக இருக்கும். அவற்றின் ஊடாக ஒரு லெஸ்பியன் தம்பதிகளின் கதையும் இருக்கிறது. அதன் வாயிலாக லெஸ்பியன் பெண்களின் உணர்வுகளையும் படத்தில் பேசி இருக்கிறோம். ஒரு சராசரியான நபராக இருக்கும் மனிதன், தான் விரும்பிய சிறிய விசயங்களை கூட அடைய முடியாத போது, அதை அடைய, எதையும் செய்யலாம் என்று முயற்சி செய்யும்போது சைக்கோவாக மாறுகிறான். அப்படியான ஒரு மனிதனின் கதை தான் இந்த படம். என்றார்.