சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
'கர்ணன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட உதயநிதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதிக்காக பா.இரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க இருந்த நிலையில் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்தப் படத்தில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் பகத். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும் அவர் நடித்து வருகிறார். தற்போது உதயநிதி படத்திலும் இணைந்துள்ளார். படத்தில் உதயநிதிக்கு வில்லனாக அவர் நடிக்க இருக்கிறார்.