'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா |

சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது அவர்கள் விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பேட்டியில் நாகசைதன்யா பதிலளித்திருந்தபோதும் சமந்தா மட்டும் இன்னமும் அமைதி காத்து வருகிறார்.
இந்தநிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்த்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஹாஷி- ஷாஷா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, இத்தனை சீக்கிரம் இந்த இரண்டு நாய்களும் நன்றாக பழகி சேர்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதே எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அதோடு, இந்த இரண்டு நாய்களுமே ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது புதிய விசயங்களை கற்றுக்கொடுத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.