Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கும், அவரது அம்மாவுக்கும் மனக்கசப்பு இல்லை - எஸ்.ஏ சந்திரசேகரன்

28 செப், 2021 - 15:28 IST
எழுத்தின் அளவு:
SA-Chandrasekaran-opens-about-vijay-and-his-mother-controversy

தமிழ்த் திரையுலகத்தின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகரால் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் அவரது இயக்கத்தில் சில பல படங்களில் நடித்து அதன் மூலம்தான் ரசிகர்களின் மனதில் அந்தக் காலத்தில் இடம் பிடித்தார்.


சமீப காலமாக அரசியல் கட்சி விவகாரத்தால் விஜய்யும், அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையில் பிரச்னை உருவாகி அது நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. சமீபத்தில் தான் இயக்கியுள்ள நான் கடவுள் இல்லை பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட தனக்கும் மகனுக்கும் இடையே பிரச்னை இருக்கிறது. எந்தக் குடும்பத்தில்தான் பிரச்னை இல்லை என்று எஸ்ஏசி பேசியிருந்தார்.


இந்நிலையில் வாரப் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், எஸ்ஏசியும், அவரது மனைவி ஷோபாவும் விஜய்யைப் பார்க்கச் சென்றதாகவும். கேட்டில் காத்திருந்த போது ஷோபாவை மட்டும் விஜய் வரச்சொன்னதாகவும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தான் அப்படி பேட்டியளிக்கவில்லை என்றும், அதற்கான உண்மையை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், “இன்றைய வார இதழ் ஒண்ணுல, என்னுடைய பேட்டி வந்திருக்குது. பேட்டி அழகா இருந்தது, எல்லாம் சொன்னதுலாம் வந்திருந்தது, நான் எப்பவுமே எதையுமே வெளிப்படையா பேசுவேன். என்னைப் பத்தி கேட்டிருந்தாங்க, என் படம் நான் கடவுள் இல்லை படத்தை பத்தி கேட்டிருந்தாங்க, விஜயகாந்த் பத்தி கேட்டாங்க, எல்லாத்தையும் ஓபனா சொல்லியிருந்தேன்.


அது போல என் குடும்பத்தைப் பத்தி கேக்கும் போது, நான் சொல்லாத ஒரு விஷயம் அதுல வந்திருந்தது. நானும் ஷோபாவும், விஜய் வீட்டுக்கு வெளியில கார்ல காத்திருந்ததாகவும், அவர் வந்து ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொல்லுங்கன்னு சொன்னதாகவும், நாங்க இரண்டு பேருமே திரும்பி வந்துட்டதாகவும் அதுல ஒரு தவறான செய்தி வந்திருந்தது. அது உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்பினேன், அதுதான் இது.


ஏன்னா, எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது உண்மை, அது இல்லன்னு எப்பவுமே நான் மறுக்க மாட்டேன். இன்னைக்கு பிரச்னை இருக்கிறது உண்மை. மத்தபடி அவனும், அவன் தாயும், அதாவது அவனும், என் மனைவியும் எப்பவும் போல பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க, பேசிக்கிட்டுதான் இருக்காங்க, பழகிட்டுதான் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்குள்ள எந்த மனக்கசப்பும் இல்லை, சந்தோஷமாதான் இருந்திட்டிருக்காங்க.


அப்படியிருக்கும் போது, அவங்க கேட்டுல காத்திக்கிட்டிருந்ததாகவும் .............அப்படிங்கறது வந்து தவறு, தவறான விஷயத்தை அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது தவறுன்னு சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்துல நான் இருக்கிறதால இதை நான் பதிவு பண்றேன்,” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
காந்தி ஜெயந்தியில் மாநாடு டிரைலர்காந்தி ஜெயந்தியில் மாநாடு டிரைலர் பல போட்டிகளுடன் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் ? பல போட்டிகளுடன் 'ஆர்ஆர்ஆர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Ranganathan PS - chennai,இந்தியா
29 செப், 2021 - 10:13 Report Abuse
Ranganathan PS தயவு செய்து தினமலர் இதை போன்று செய்திகளை போட வேண்டாம் இதை போன்ற செய்தி பத்திரிகை வரும் நல்ல செய்திகளை மறைத்துவிடுகிறது
Rate this:
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
29 செப், 2021 - 09:56 Report Abuse
Ranjith Rajan தளபதிக்கு அரசியலுக்கு வர ஆசை. ஆனால் உள்ளூர பயம். ஆளும்கட்சி தளபதிக்கு பயந்து குடும்பமே நாடகம் ஆடுகிறது. உள்ளாட்சி தேர்தல் வரைக்கும் (அதுவும் விஜய்க்கு தெரியாம) வந்து பலம் எப்படி இருக்குனு பாக்க போறாங்களாம்..
Rate this:
N. Srinivasan - Chennai,இந்தியா
29 செப், 2021 - 09:07 Report Abuse
N. Srinivasan அடுத்த படம் வருதுன்னு சொல்லுங்க.
Rate this:
28 செப், 2021 - 23:20 Report Abuse
Narayanan K எல்லாம் செட்டப்புனு அப்பவே தெரியும்
Rate this:
28 செப், 2021 - 21:35 Report Abuse
ilaiyaraja muthu எப்படி யா இதையெல்லாம் வெளியே வந்து சொல்றீங்க......... கூச்சம் இல்லாமல்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in