அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் அவரது தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்கிறார். இதற்கிடையே தமிழில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இதுவரை செல்வராகவனுக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார் என்றுதான் யூகிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்திலும் செல்வராகவனின் தங்கையாகவே கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
அதோடு அண்ணனாக நடித்துள்ள செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள ஒரு செண்டிமென்ட் காட்சியில் கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்டபடி நடித்து டோட்டல் யூனிட்டையும் கண்கலங்க வைத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ். ஆக, ரஜினி, சிரஞ்சீவி மட்டுமின்றி செல்வராகவனுடனும் தங்கை வேடத்தில் தான் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.