சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்திலிருந்து சில உறுப்பினர்கள் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒரு புதிய சங்கத்தை கடந்த ஆண்டு ஆரம்பித்தனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றது. அதன் தலைவராக முரளி ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற மற்றொரு சங்கத்தை உருவாக்கினார்.
இந்த சங்கத்திலிருந்து பிரிந்த சில முக்கிய நிர்வாகிகள் சங்கத்தை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கமும், நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் ஒன்றாகப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இரண்டு சங்கத்தினரும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவை உருவாக்கியுள்ளார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, முரளிதரன், எஸ்ஏ சந்திரசேகரன், கேயார், கலைப்புலி தாணு, தற்போதைய நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், மன்னன், கதிரேசன், ஆர்கே சுரேஷ், சந்திர பிரகாஷ் ஜெயின், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தியாகராஜன், டி.சிவா, தனஞ்செயன், எஸ்ஆர் பிரபு, லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில், திரையுலக நலன் கருதி இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்கள். மாதம் இரு முறை இந்த ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது.
டி ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் தற்போது என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும். அந்த சங்கத்தில் உள்ளவர்களை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால், அவர்கள் படங்களைத் தயாரிக்க சிக்கல்கள் எழலாம்.




