என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சீரியல் நடிகைகள் பலரும் கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அலப்பறைகள் செய்து கொண்டிருக்க எந்தவித அலட்டலும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் தன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை ரேவதி.
இயக்குனர் திருமுருகன் எளிய மனிதர்களின் வாழ்வை தன் கதையில் படமாக்குவதை போலவே அதில் நடிப்பவர்களையும் எதார்த்த மனிதர்களாகவே தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் நாதஸ்வரம், கல்யாண வீடு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. வெள்ளித்திரையிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்த பின் நடிப்பதற்கு டாட்டா சொல்லிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார். ரேவதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.