7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் | மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள தலைவி படம் சமீபத்தில் வெளியானது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனாவும் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடிக்க, இயக்குனர் விஜய் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றே தியேட்டர்களின் கலெக்சன் ரிப்போர்ட் சொல்கிறது.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி ஞாயிறு அன்று திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு சென்ற ரஜினிகாந்த், இயக்குனர் விஜய்யை தொலைபேசியில் அழைத்து, படம் குறித்து மனம் விட்டு பாராட்டினாராம். ரஜினியின் பாராட்டினால் படக்குழுவினர் தற்போது உற்சாகமாகி இருக்கிறார்களாம்.