மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி15 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் மற்றும் ஆச்சார்யா படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கெண்டு வருகிறாராம் ராம்சரண். காரணம், தனது படத்தில் நடிக்க வந்தபிறகு படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று ராம்சரணுக்கு கண்டிசன் போட்டுள்ளாராம் ஷங்கர்.
அதன்காரணமாகவே ஏற்கனவே நடித்துவந்த இரண்டு படங்களின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்து விட்டு அதன்பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தி நடிக்க திட்டமிட்டுள்ள ராம்சரண், புதிதாக தான் நடிக்கயிருந்த இன்னொரு தெலுங்கு படத்தையும் தள்ளி வைத்து விட்டாராம்.
இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தை குறுகிய காலத்தில் படமாக்கி முடித்து விட்டு அடுத்த ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதால் ராம்சரண் மட்டுமின்றி, இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளுக்கும் இதே கண்டிசனை போட்டுள்ளாராம் ஷங்கர்.




