சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

டொவினோ தாமஸ் மலையாளத்தில் நடித்துள்ள சூப்பர் ஹீரோ படம் மின்னல் முரளி. ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் முரளியை ஒரு மின்னல் தாக்க, அதன் மூலம் அவருக்கு பல சூப்பர் பவர் கிடைக்கிறது அதைக்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.
மின்னல் முரளியாக டொவினோ தாமஸ் நடிக்கிறார் அவர் தவிர குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது
படம் குறித்து இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது: மக்கள் தங்கள் வாழ்வுடனும் உணர்வுகளுடனும் நெருக்கமாக உணரும் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க நினைத்தோம். ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் முக்கிய சாராம்சம் ஆக்சன் அதிரடி தான் என்றாலும், எங்களது குறிக்கோள், ஒரு வலுவான கதையின் பின்னணியில் தான் ஆக்சன் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இப்படத்தில் ஆக்சன் இருக்கும் அதே அளவு உணர்வுபூர்வமான கதையும் இருக்கும். இப்படம் மிகவும் உற்சாகமான அனுபவமாக இருக்கும், படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் வெளியிடப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்றார்.
படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கணிசமான தொகை கொடுத்து வாங்கி உள்ளது. வெளியிடப்படும் தேதி பற்றி அறிவிக்கவில்லை.




