சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரான படம் அண்டாவ காணோம். இதை இயக்கியவர் சி.வேல்மதி என்ற புதுமுக இயக்குனர். இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டி ஷோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். தாய்வீட்டு சீதனமாக கொண்டு வந்த அண்டா புகுந்த வீட்டுக்கு வந்த இடத்தில் காணாமல் போக அதை எப்படி ஸ்ரேயா கண்டுபிடிக்கிறார் என்பதை காமெடி கலந்து கிராமிய மணத்தோடு சொன்ன படம்.
ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த சில பிரச்சினைகள் காரணமாக பல முறை பட ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. கடைசியாக தயாரிப்பு நிறுவனம் சுயமாக தொடங்கிய ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டது. என்றாலும் அந்த படம் உரிய முறையில் மக்களை சென்று சேரவில்லை.
இந்த நிலையில் வேல்மதி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிறுவனங்கள் இதற்கு முன்பாக அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா மிமி வில்லா, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற படங்களை கூட்டாக தயாரித்துள்ளன.
கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் மற்றும் ஜாங்கோ படங்களின் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர், நடிகைகள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படுகிறது.