போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. அந்தப் படத்தில் தனது பாக்சிங் வாத்தியார் பசுபதியை சைக்கிளில் கூட்டிக் கொண்டு ஆர்யா செல்லும் காட்சியின் புகைப்படம் கடந்த சில வாரங்களாக மீம்ஸ்களில் விதவிதமாக வலம் வந்து கொண்டுள்ளது.
அந்தப் படத்தில் மற்ற காட்சிகளை விடவும் இந்த சைக்கிள் காட்சி மீம்ஸ்களால் மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் பதிந்த ஒரு காட்சியாகிப் போனது. இன்னமும் கூட அந்த மீம்ஸ்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் நிறுத்தவில்லை.
இதனிடையே, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள 'பிரண்ட்ஷிப்' படத்தின் டிரைலரை சற்று முன் ஆர்யா வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவித்த ஹர்பஜன், “கபிலா, என்ன ஒரு ரவுண்ட் அந்த சைக்கிள்ல கூட்டிட்டு போ பா,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்த போது தமிழில் பல சுவாரசியமான டுவீட்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹர்பஜன் சிங். இப்போது அவர் நாயகனாக அறிமுகமாகும் படத்திற்காக மீண்டும் தமிழ் டுவீட்டுகளில் இறங்கியுள்ளார்.
ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டிக்கிலோனா' படம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.