தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
ஏற்கனவே பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய பகுதியில் முடிந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலில் உர்ச்சா மற்றும் குவாலியர் பகுதிகளில் நடைபெற்று வந்த படப்படிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஸ்வர் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. அங்கு நர்மதை நதி கரையில் உள்ள பழைவாய்ந்த அகில்யா கோட்டையில் வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களாக நடிக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு சில நாட்களில் முடியவுள்ள நிலையில் விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளனர். அதன்பின்னர் கார்த்தி நடிக்கும் சில காட்சிகளை சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளது.