சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா |
திருமணம் குறித்து தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகைக்கு திருமணம் என்பது வெறும் நம் இணையரின் தோற்றம், பணம், குழந்தை போன்ற காரணிகளை மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடியதல்ல என ஸ்ருதி அறிவுரை கூறியுள்ளார்.
பிரபல நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. தொழில்முறை சமையல் கலைஞரான இவர் சொந்தமாக ஆன்லைன் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கர்ப்பமாக இருந்த போது மெட்டர்னிட்டி போட்டோ ஷூட், குழந்தை பிறந்த பிறகு ஜோடியாக இருவரும் அளித்த பேட்டிகளின் மூலம் ஸ்ருதியை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஸ்ருதியும் தனக்கு தெரிந்த பொதுவான விஷயங்களையும், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார். அந்த வகையில் ஸ்ருதியின் ரசிகை ஒருவர், எனக்கு திருமணமாக போகிறது. எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், என் பார்ட்னர் என்னை விட உயரம் குறைவு. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு எதாவது அறிவுரை கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ருதி, ஸ்டீரியோடைப்பை ப்ரேக் செய்வது சுலபமான காரியமல்ல. சிறு வயதிலிருந்தே நமக்குள் புகுத்தப்பட்ட விஷயம். அதிலிருந்து ஒரு மணி நேரத்தில் வெளிவந்து விட முடியாது என கூறியுள்ளார். மேலும், அழகான முடி வைத்திருக்கும் நபரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திருமணத்திற்கு பின் அவருக்கு முடி கொட்டும் பிரச்சனை வந்தால் அந்த காதல் போய்விடுமா?. அது போலதான் திருமணம் என்பது வெறும் புறத்தோற்றம், பணம், குழந்தை என்பதை மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடியதல்ல. சிந்தித்து பாருங்கள் என அறிவுரை கூறி தனது இண்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.