பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
நடிகர் விஷால் அடுத்தடுத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது எனிமி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷால், தன்னுடைய 31-வது படத்தை, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விஷால் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அப்போது ஆக்ஷன் காட்சிகளை தத்ரூபமாக படமாக்க பல்வேறு ரிஸ்க் எடுத்து விஷால் நடித்திருந்தார். இதுகுறித்த காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோவை விஷால் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பின்னர் எனிமி படத்தின் பணிக்காக சிறு இடைவெளி விட்ட விஷால் மீண்டும் இந்த படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஆக.,29) தனது 44வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டுள்ளார். வீரமே வாகை சூடும் எனும் தலைப்பில் மிரட்டல் தோற்றத்துடன் பர்ஸ்ட் லுக் படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.