நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் நாகார்ஜுனா. தெலுங்குத் திரையுலகின் கருப்பு வெள்ளை கால முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அக்கினேனி நாகேஸ்வரராவின் மகன்.
'ஓர் இரவு, பூங்கோதை, தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, கல்யாணப் பரிசு, மனிதன் மாறவில்லை' ஆகிய படங்கள் நாகேஸ்வரராவின் சில முக்கியமான தமிழ்ப் படங்கள். அவர் நடித்த 'தேவதாஸ்' படம் இன்றைக்கும் காதல் படங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார் நாகேஸ்வரராவ்.
அவரது மகன் நாகார்ஜுனா 1986ம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்' தெலுங்குப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்த சில வருடங்களிலேயே தெலுங்குத் திரையுலகில் தனக்கென ஒரு தடத்தை உருவாக்கினார். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தற்போதும் நாயகனாகவே நடித்து வருகிறார். அவரைப் பார்ப்பவர்கள் யாரும் இன்று 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்று சொல்ல மாட்டார்கள். அதில் பாதி வயதுதான் அவருடைய தோற்றம் இருக்கும்.
இன்றைய தமிழ் சினிமா இளம் ரசிகர்களுக்கு நாகார்ஜுனா பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 90ஸ் இளைஞர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். தெலுங்கில் அவர் நடித்து தமிழில் டப்பிங் செய்து வெளியாகி சூப்பர் ஹிட்டாகி வரவேற்பைப் பெற்ற இரண்டு படங்களான மணிரத்னம் இயக்கிய 'இதயத்தைத் திருடாதே (1989), ராம் கோபால் வர்மா இயக்கிய 'உதயம் 1990)' ஆகிய இரண்டு படங்கள் அந்தக் கால இளைஞர்களைக் கவர்ந்த படங்களாக அமைந்தது.
'இதயத்தைத் திருடாதே' (தெலுங்கில் 'கீதாஞ்சலி') படம் ஒரு மென்மையான காதல் கதை. 'உதயம்' (தெலுங்கில் ‛ஷிவா') படம் அதற்கு நேரெதிரான அதிரடி ஆக்ஷன் படம். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. இதில் 'இதயத்தைத் திருடாதே' படம் 100 நாட்களைக் கடந்தும், 'உதயம்' படம் 175 நாட்களைக் கடந்தும் தமிழகத்தில் பல ஊர்களில் ஓடியது.
தன்னுடைய இரண்டு டப்பிங் படங்கள் தமிழில் பெரிய வெற்றி பெற்றது என்றாலும் ஏழு வருடங்கள் கழித்தே 'ரட்சகன் (1997)' என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடித்தார் நாகார்ஜுனா. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தும் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. எனவே, அவர் அதற்குப் பிறகு தமிழ்ப் பக்கம் உடனடியாக வரவேயில்லை. 90களில் பல தெலுங்குப் படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பல ஹிட்டுகளைக் கொடுத்தார் நாகார்ஜுனா.
19 வருடங்களுக்குப் பிறகு கார்த்தி நடித்த 'தோழா' படத்தில் மற்றொரு கதாநாயகனாக மீண்டும் தமிழுக்கு வந்தார் நாகார்ஜுனா. இரண்டாவது காதல் மனைவி நடிகை அமலா, அவர்களது மகன் அகில் என தற்போது ஐதராபாத்தில் வசித்துக் கொண்டு இப்போதும் தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாகத் தொகுத்து வழங்குகிறார்.
முதல் மனைவியுடனான மகன் நடிகர் நாக சைதன்யா, மருமகள் நடிகை சமந்தா என மூன்றாவது தலைமுறையினரும் நட்சத்திரக் குடும்பமாகவே இருக்கிறது நாகார்ஜுனாவின் குடும்பம். இன்று பிறந்தநாள் காணும் நாகார்ஜுனாவுக்கு 90ஸ் இளைஞர்கள் மீண்டும் தங்கள் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்து வாழ்த்து சொல்கிறார்கள்.