Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரபரப்பாகும் சமந்தா - நாகசைதன்யா பிரிவு ?

28 ஆக, 2021 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Is-Samantha---Nagachaitanya-marriage-life-to-be-break?

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த வெப் சீரிஸான 'த பேமிலி மேன் 2' மூலம் இந்திய அளவிலும் புகழ் பெற்றார் சமந்தா. அந்த சீரிஸில் கொஞ்சம் கவர்ச்சிகரமாக நடித்தார் என்றும் பரபரப்பு எழுந்தது.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் 'சமந்தா அக்கினேனி' என்றிருந்த அவரது பெயரை 'எஸ்' என்ற ஒரே எழுத்தில் மாற்றிக் கொண்டார். அப்போது அவர் நடித்து வரும் 'சாகுந்தலம்' படத்திற்கான பிரமோஷனாக மாற்றியிருக்கிறார் என்று சொன்னார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக டோலிவுட் வட்டாரங்களில் சமந்தா, நாக சைதன்யா பற்றிய பேச்சுக்கள்தான் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து சிறிது ஓய்வெடுக்கப் போவதாக சமந்தா அறிவித்திருந்தார்.

மேலும், ஒரு தெலுங்கு சினிமா இணையதளத்தில் 'கிசுகிசு'வாக பெரிய இடத்து ஜோடி ஒன்று விரைவில் அதிகாரப்பூர்வமாக பிரிய இருக்கிறது. பல கோடி ரூபாய் சொத்துக்களை மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் வழங்க இருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதையும், சமந்தா, நாக சைதன்யா விவகாரத்தையும் சேர்த்து வைத்தும் கிசுகிசுக்கிறார்கள்.

இருப்பினும் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது இந்த பிரிவு கிசுகிசுக்கள் பற்றி சமந்தாவிடம் கேட்கப்பட்ட போது, “ஒரு சர்ச்சை அல்லது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்போது பேச விரும்புகிறேனோ அப்போது தான் பேசுவேன். மக்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்கும் போது பேச மாட்டேன். அப்படியான விஷயங்களுக்கு நான் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை. எந்த மோதலையும் நான் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களது சொந்த கருத்துக்களைப் பற்றி எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ அது போல எனது கருத்துக்களுக்கும் உரிமை உள்ளது,” என்று சொல்லியிருக்கிறார்.

நாளை சமந்தாவின் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனாவின் பிறந்தநாள் வருகிறது. அதற்கு சமந்தா ஏதாவது வாழ்த்து தெரிவிக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து ரசிகர்களின் யூகங்களுக்கு ஒரு பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கூட்டு தயாரிப்பு நிறுவனத்துக்காக சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்கூட்டு தயாரிப்பு நிறுவனத்துக்காக ... 9 சைமா விருதுகளுக்கு சைக்கோ படம் பரிந்துரை 9 சைமா விருதுகளுக்கு சைக்கோ படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ram - Thanjavur,இந்தியா
31 ஆக, 2021 - 06:17 Report Abuse
Ram பெரிய இடத்து சின்ன சமாச்சாரம்
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
29 ஆக, 2021 - 18:37 Report Abuse
DVRR இவர்கள் இருவரும் சேர்ந்து கோவா கடற்கரையில் நிலம்வாங்கி பெரிய பங்களா கட்டுகின்றார்கள் இவர்கள் பிரியப்போகின்றார்களா இந்த கதை சில தினங்களாக வந்து கொண்டே இருந்தது இரண்டு நாட்களாக இந்த கோவை விஷயம் வருகின்றது. ஆகவே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
29 ஆக, 2021 - 06:46 Report Abuse
ஆக .. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் ..தெலுகு சினிமா நட்சத்திரங்களுக்கு இதெல்லாம் சகஜம் ...
Rate this:
Sridhar - Chennai ,இந்தியா
28 ஆக, 2021 - 18:24 Report Abuse
Sridhar Gold digger
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in