விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன. நாளை மறுதினம் முதல் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய படங்கள் சிலவற்றின் வெளியீட்டு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதில் முக்கியமான ஒரு படமாக 'தலைவி' படம் உள்ளது. இப்படம் மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் கதாபாத்திரங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது குறித்து சினிமா ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' படம் திமுகவுக்கு ஆதரவான படமாக இருந்தது, எம்ஜிஆரை களங்கப்படுத்தும் விதத்தில் சில காட்சிகள் இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அடுத்து 'தலைவி' படத்தில் கருணாநிதியை எப்படி காட்டப் போகிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது திமுக ஆளும் கட்சியாக உள்ள நிலையில், கருணாநிதி தான் தனது அரசியல் எதிரி என்று சொன்ன ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் அவரை எதிரியாகத்தான் காட்டியிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுவது இயல்புதான்.
அதே சமயம் ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் எம்ஜிஆரின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதும் பலருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் கூட சினிமாவில் நடித்த காலத்தில் சில பல மோதல்கள் எழுந்ததும் மறுக்க முடியாத ஒன்று.
அதனால், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியேரை படத்தில் காட்டியிருக்கும் விதத்தைப் பொறுத்து படத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் அரசியல் ரீதியாக உருவாக வாய்ப்புண்டு.
'தலைவி' படத்தின் டிரைலரில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தைக் கூடக் காட்டிவிட்டார்கள். ஆனால், கருணாநிதி கதாபாத்திரத்தை சிறிதும் காட்டவில்லை.
'தலைவி' படம் யாருக்கு தலைவலியை ஏற்படுத்தப் போகிறது என்பது செப்டம்பர் 10ம் தேதி தெரிந்துவிடும்.