பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் |
தென்னிந்தியத் திரையுலகின் முக்கியமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவர் 2010ம் ஆண்டு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நேற்று தன்னுடைய திருமண நாளை மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார்.
பிரகாஷ்ராஜ், போனி வர்மா தம்பதிக்கு வேதாந்த் என்ற ஆறு வயது மகன் இருக்கிறார். அவர் தனது பெற்றோரின் திருமணத்தை மீண்டும் பார்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போல மகனுக்காக பிரகாஷ்ராஜும், போனியும் செய்து காட்டியுள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் பிரகாஷ்ராஜின் இரண்டு மகள்களும் கலந்து கொண்டனர். பிரகாஜ்ராஜ் தனது முதல் மனைவி நடிகை லலிதகுமாரியிடமிருந்து விவாகரத்து பெற்றவர். அத்தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள்தான் இந்த இரண்டு மகள்கள்.
நேற்றைய கொண்டாட்டப் புகைப்படங்களை பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் மனைவிக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.