எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான காசே தான் கடவுளடா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு, 2021 ஜூலை 16 அன்று துவங்கியது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாளில் முடிய இருக்கிறது. கொரோனாவின் 3வது அலை வந்து ஊரடங்கு மீண்டும் வர வாய்ப்பிருப்பதால் படப்பிடிப்புகள் மிகவேகமாக நடத்தப்பட்டு வருகிறது.
சித்ராலயா கோபு இயக்கிய தமிழின் எவர்கிரீன் காமெடி படமான காசேதான் கடவுளடா படம்தான் அதே பெயரில் ரீமேக் ஆகிறது. இதுகுறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் கூறியதாவது: படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச்சரியாக நடைபெறுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது, எனது படக்குழுவினர் தான். அவர்களுக்கு, என் மனதார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும் தந்த மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தற்போது படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படத்தில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். என்றார்.