இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
தமிழ் சினிமாவில் ஏழு வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்தானம். தானும் நாயகனாக மாற வேண்டும் என 2014ல் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தை சொந்தமாகத் தயாரித்து நாயகனாக நடித்தார். அந்தப் படமும் அடுத்து வெளிவந்த 'இனிமே இப்படித்தான்' படமும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் சந்தானத்தைக் காப்பாற்றியது.
2015ம் ஆண்டிலேயே சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பமான படம் 'சர்வர் சுந்தரம்'. 2016லேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2017ல் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்பின் பல முறை படத்தின் வெளியீட்டை அறிவித்தாலும் இதுவரையிலும் படம் வெளியாகவில்லை. அதன்பின் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தும் அதுவும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான 'டிக்கிலோனா' படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்தப் படமும் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். சில பால காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனகா, ஷெரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சீரியஸ் படங்களாகவே ஓடிடியில் வந்து கொண்டிருக்கும் நிலையில், சந்தானத்தின் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வருவது கொஞ்சம் மாற்றமாகத்தான் இருக்கும்.