கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! |
அந்தக் கால நடிகைகள் நடித்து சம்பாதித்த பணத்தை சொந்த படம் எடுத்து, பிற்காலத்தில் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இந்த காலத்து நடிகைகள் ரொம்பவே விபரமானவர்கள், ரியல் எஸ்டேட், நகை கடை, துணி கடை, ஷேர் மார்க்கெட் என தங்கள் பணத்தை பத்திரமாக முதலீடு செய்கிறார்கள். சமீபத்தில்கூட நயன்தாரா சாய்வாலா என்ற நிறுவனத்தில் முதலீடு செய்த தகவல்கள் வெளியானது.
அந்த வரிசையில் நடிகை ஜனனி தனது சகோதரியுடன் இணைந்து ஆடை விற்பனை செய்யும் வியாபாரத்தில் இறங்கி உள்ளார். அவன் இவன் , தெகிடி. அதே கண்கள், பலூன், பாகன், விதி மதி உல்டா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள வேஷம், கசட தபற அந்தாலஜி, பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் உள்ளிட்ட படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு அவருடைய தங்கையுடன் சேர்ந்து புதிய வியாபாரம் ஒன்றை துவங்கியுள்ளார். தி ஹசல் அவென்யூ என்ற இணையத்தளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, மாடர்ன் உடைகளை விற்பனை செய்கிறார். அவர் விற்கும் உடைகளுக்கு அவரே விளம்பர மாடல் ஆகவும் உள்ளார்.
நடிகர், நடிகையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் ஜனனி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களாம். சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை அகற்றியதால் பாராட்டப்பட்டவர் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது.