பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரனி, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவால் தடைபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பாலம் பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா அருள் மோகன், சூரி, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்பட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பற்றி கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து ஊர் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டு விட்டனர். அவர்கள் யாரும் முககவசம்கூட அணிந்திருக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டனர். பின்னர் போலீஸ் உதவியுடன் அங்கு கூடிய மக்களை கலைந்து போகச் செய்தனர். படப்பிடிப்புக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா. படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.