தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அதன்பிறகு 2013ல் சசிகுமார் நடித்த குட்டிபுலி படம் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் பாலசரவணன். தொடர்ந்து திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம் என பல படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார் பாலசரவணன்.
கல்லூரி கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் மாணவனாக காமெடி கலந்த வேடத்தில் நடித்துவரும் அவர், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார். அதுகுறித்த போட்டோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பாலசரவணன், தற்போது பொள்ளாச்சியில் டான் படப்பிடிப்பில் தான் இருக்கும் தகவலையும் வெளியிட்டுள்ளார்.