டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
மலையாள திரையுலகில் நடிகர் பஹத் பாசிலுக்கு வெற்றி படமாக அமைந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் ஒரு குணசித்திர நடிகராக அறிமுகமானவர் தான் அலான்சியர் லே லோபஸ். எதார்த்தமாக நடித்திருந்த அவருக்கு அந்த படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன. ஒரு கட்டத்தில் மீடு குற்றச்சாட்டுக்கும் ஆளாகி அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு அதிலிருந்து வெளிவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் போலீஸ் யூனிபார்மில் மெலிந்த உடல் தோற்றத்துடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
பின்னர் இது அவர் தற்போது நடித்துள்ள 'வேற ஒரு கேஸ்' என்கிற படத்திற்காக அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்று தெரிய வந்தாலும் இவர் உடல் மெலிந்து இருப்பதற்கு காரணம் என்ன, உடல் பிரச்னையா என்றும் ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் செபி சவுகத் கூறும்போது, “அலான்சியர் லே நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரிடம் பேசும்போது பேச்சுவாக்கில் இந்த கதாபாத்திரத்திற்கு உடல் எடையை குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அதற்காக சில டிப்ஸ்களையும் சொல்லியிருந்தேன்
அதன்பிறகு படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் அவருக்கு ஆடை அளவு எடுப்பதற்காக சென்றபோது தான் அவர் இப்படி மெலிந்து இருப்பதை பார்த்தேன். ஏதாவது உடல் பிரச்னையா என்று கேட்டபோது, இல்லை இந்த படத்திற்காக நீங்கள் சொன்ன டயட்டை கடைபிடித்து உடல் எடையை குறைத்துள்ளேன் என்று கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார். மற்றபடி சமீபத்தில் டப்பிங் பேச வந்தபோது அவர் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அதனால் ரசிகர்கள் இவர் குறித்து தேவையில்லாமல் புதிய கட்டுக் கதைகளை உருவாக்குவதை தவிருங்கள்” என்று கூறியுள்ளார்.