'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில், சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. அதனால் இந்தப்படத்தை மலையாளம் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் என, ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.
தனது முதல் பான் இந்தியா படம் என்பதால், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட மிக்ஸிங் பணிகளை துல்கர் சல்மானே ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கிறாராம். எண்பதுகளில் கோழிக்கோட்டை கலக்கிய சுகுமார குறூப் என்கிற கொள்ளையனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.