அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

அருவா சண்டை படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.ராஜா. தற்போது அவர் இயக்கி தயாரிக்கும் படம் பார்கவி. இதில் முகேஷ் என்ற புதுமுகத்தின் ஜோடியாக ஸ்ரேயா என்ற மாடல் அழகி நடிக்கிறார். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி வி.ராஜா கூறியதாவது: பார்கவி வரலாற்று படமாகும், குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனுபவம் மட்டும் அல்ல நுனுக்கமான தொழில் நுட்பமும் தெரிந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். படத்தின் கதாநாயகன் முகேஷ் பட்டதாரி இளைஞன், கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர். இருவரும் நடிப்பு பயிற்சிகள் பெற்று வருகிறார்கள். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. என்றார்.