ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழில் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ஹிட் ஆன 'வேதாளம்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்தை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். தற்போது சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் ராம் சரணும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதையடுத்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி இணையவுள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வேதாளம் தமிழில் அஜித்தின் தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்த பின் லட்சுமி மேனனுக்கு வாய்ப்புகள் குறைந்துபோனது. இதை காரணம் காட்டி கீர்த்தி சுரேசை நடிக்க வேண்டாம் என்று நண்பர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் அதை கண்டுகொள்ளாமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்கிறார்கள்.