படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய் பிறந்தநாளன்றும், வம்சியில் நேற்றைய பிறந்த நாளன்றும் அப்படத்தின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் வரவில்லை.
இயக்குனர் வம்சி நேற்று அவருடைய பிறந்தநாளுக்காக ஐதராபாத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சங்கீதா, சோனு சூட், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, அல்லு அரவிந்த், மெஹர் ரமேஷ், அனில் ரவிப்புடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வம்சி பைடிபள்ளிக்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான கிரிஷ், “எனது அபிமானத்திற்கு உரிய மனிதர், இயக்குனர்களில் ஒருவரான வம்சிக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் நண்பரே. விஜய் அண்ணாவுடன் உங்களுடைய அடுத்த படத்திற்காக வாழ்த்துகள், காத்திருக்கிறோம்,” என நேற்று மாலை டுவீட் செய்துள்ளார். அதன்பின் அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்ட விஜய் ரசிகர்கள், விஜய் 66 படத்தின் அப்டேட் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து அதை பரவச் செய்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னரே வம்சி ஒரு பேட்டியில் விஜய் படம் பற்றி குறித்து பேசியிருந்தார். நேற்று க்ரிஷ் டுவீட் செய்து டெலிட் செய்துவிட்டார். விஜய் 66 விவகாரத்தில் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.