'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த 'கபாலி' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. அவ்வப்போது அவரது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான, கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவார். அந்த விதத்தில் நேற்று பூங்கா போன்ற ஒரு இடத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தவளை சிலைக்குப் பக்கத்தில், அந்த தவளை போலவே அமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு கால்களை மடித்து அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் கண்டிப்பாக அதிர்ச்சியோ அதிர்ச்சிதான்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “எல்லோருமே மிருகங்கள்தான். நான் தவளை போலவே இருக்கிறேன். நீங்கள் எந்த மிருகம் ?,” என அவர் கேள்வியும் கேட்டுள்ளார்.